திட்டக்குடி அருகே உள்ள தர்மகுடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை மகன் செல்வம் (வயது 42), டிரைவர். இவர் நேற்று தர்மகுடிக்காட்டில் உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் டிப்பர் ஒன்று எதிர்பாராதவிதமாக செல்வம் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் விரைந்து வந்து பலியான செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்தியாளர்; சாகுல் ஹமீது

No comments:
Post a Comment