கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் இன்று தமிழ்நாடு மின்சாரத் துறையின் சார்பாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் காணொளி காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் ஏராளமான கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் தொடர்புடைய கழகம் ஓராண்டில் 1,00,000 விவசாய மின் இணைப்பு பெற்ற கலந்துரையாடல் பேருரை நடந்தது. இதில் விவசாயிகள் குறைகேட்பு, இணைப்பு இல்லாதவர்களுக்கு இணைப்பும் வழங்குதல், போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வு காணப்படும் என்று மின்வாரியத் துறை தெரிவித்தது அங்கிருந்த பொதுமக்களுக்கு மானிய கோரிக்கை சார்பாக துரித நடவடிக்கை விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்குதல் போன்றன துரித நடவடிக்கைகளை கூறினார்கள்.
உடன் விருத்தாசலம் செயற்பொறியாளர் அவர்களும், மங்களூர்,திட்டக்குடி பெண்ணாடம் தொழுதூர் விருத்தாசலம் உதவி செயற்பொறியாளர் அவர்களும், தொழுதூர் திட்டக்குடி பெண்ணாடம் உதவி மின்கல பணியாளர்களும்,இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் T.S.ராஜா, A. தீன்முகமது சிறப்பாக இந்த விழாவை ஏற்பாடு செய்தனர் மற்றும் ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.செய்தியாளர்; செ.பாலாஜி.


No comments:
Post a Comment