இந்நிலையில் கல்லூரியில் தற்போது முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் அரசு கல்லூரிகளில் போன்ற ரூ.13 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு உள்ளிட்ட மாணவர்களுக்கு 4 லட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.ஒரே கல்லூரியில் இரு வேறான கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்தும், மற்ற அரசு கல்லூரிகளில் கல்வி கட்டணம் வசூலிப்பது போல், இங்கேயும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கூறி கோரிக்கை வைத்தனர்.
இந்த கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த 8 வது நாளாக காலவரையற்ற கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மற்றும் பயிற்சி மருத்துவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்தார்
மேலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியில் இருந்து உடனடியாக காலி செய்யவும் அவர் உத்தரவிட்டார். ஆனால் இதை ஏற்க மாணவர்கள் மறுத்து விட்டனர். தொடர்ந்து 17ஆவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தினார்
அதில் ஒரு பகுதியாக "கட்டண சுமையால் கழுத்தை நெறிக்கும் துடிப்புமாணி போராட்டம்" மாணவர்கள் ஈடுபட்டனர்.கடலூரில் மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment