விருத்தாசலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் ஓவியக் கண்காட்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 April 2022

விருத்தாசலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் ஓவியக் கண்காட்சி

விருத்தாசலம் அடுத்த நடியப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் ஓவியக் கண்காட்சி


விருத்தாசலம் அடுத்த நடியப்படடு ஊராட்சியில் தலைமையாசிரியர் பேசில் ராஜ் தலைமையில், தமிழாசிரியர் சந்தோஷ் குமார் வரவேற்றார். விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் சுகப்பிரியா அவர்கள் கண்காட்சியை துவக்கி வைத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 


நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் அவர்களும், மு. ஊராட்சி மன்ற தலைவர் சிவகோதண்டம் அவர்கள் முன்னிலை வகித்தனர்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயபால் அவர்களும், முன்னாள் மாணவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.


பள்ளியின் மாணவ, மாணவிகள் பல்வேறு உபகரணங்களை பயன்படுத்தி சிறப்பாக அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்து காட்சிப்படுத்தியும், அழகு மிகுந்த ஓவியங்களை வரைந்தும் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றனர். கண்காட்சி ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் மாயவேல்,இரவிச்சந்திரன், ஓவிய ஆசிரியர்முருகன் ஆகியோர் செய்தனர். அறிவியல் கண்காட்சியில் பங்குபெற்ற மாணவமணிகளுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


விழாவில் ஊர் பொதுமக்களும், பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.இறுதியில் ஆசிரியர் ஜெகன் ஜோதி அவர்கள் நன்றி கூறினார்.

செய்தியாளர்; இரா.சீனிவாசன்.

No comments:

Post a Comment

*/