ஐவதகுடி சமத்துவபுரத்தில் வீட்டில் ஐந்தரை அடி நீளமுள்ள சாரை பாம்பு தீயணைப்பு துறையினர் பிடித்து வனபகுதியில் விட்டனர்
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள ஐவதகுடி சமத்துவபுரத்தில் வசிப்பவர் முருகேசன் மகன் ஞானபிரகாஸ் இவர் தனது குடும்பத்தினருடன் ஏப்ரல் 22 ந் தேதி வெள்ளிக்கிழமை காலையில் வழக்கம் போல் வீட்டின் முன்பு உட்கார்ந்து இருந்த போது சரசரவென வந்த சாரை பாம்பு வீட்டிற்குள் புகுந்துவிட்டது, அதனால் வீட்டிற்குள் இருந்த பெண்கள் பயந்து வெளியே ஓடிவந்தனர்
பின்னர் வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சதாசிவம் தலைமையில் வந்த தீயணைக்கும் வீரர்கள் வீட்டின் சமையல் அறையில் பதுங்கியிருந்த பாம்பை லாவகமாக பிடித்து பெரியநெசலூர் வனபகுதியில் விட்டனர்.
செய்தியாளர்; ஐாபர்

No comments:
Post a Comment