பண்ருட்டியில் பண்ணுருட்டி செந்தமிழ் சங்கம் முப்பெரும் விழா. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 April 2022

பண்ருட்டியில் பண்ணுருட்டி செந்தமிழ் சங்கம் முப்பெரும் விழா.

பண்ருட்டியில் பண்ணுருட்டி செந்தமிழ் சங்கம் முப்பெரும் விழா.


கடலூர் மாவட்டம், பண்ருட்டி யில் பண்ணுருட்டி செந்தமிழ் சங்கத்தின் முப்பெரும்  விழாவாக 115 வது மாத அமர்வு ,விருது வழங்கும் விழா, பாவலர் சுந்தர பழனியப்பன் அவர்களின் தாயார்  சகுந்தலா அம்மாள் படத்திறப்பு விழா, என முப்பெரும் விழா திருவதிகை  எஸ் .வி திருமண மண்டபத்தில்  கௌரவத் தலைவர் பா.ச. வைரக்கண்ணு அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. 


இலந்தை கோதண்டபாணி அவர்கள் தமிழ் வாழ்த்து பாட பண்ணுருட்டி ஆருத்ரா நாட்டியப்பள்ளி மாணவர்கள் நாட்டிய நிகழ்வுடன் விழா இனிதே தொடங்கியது.விழாவில் செல்வம் வினோத் கிருஷ்ணமூர்த்தி புலவர் ராஜேந்திரன் தங்கவேலு  குமாரியோகேஷ் பாடகர் சிவானந்தம் குமாரராஜன் சிவவைத்தியநாதன் அஞ்சலாட்சி வ.ந.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிர்வாக செயலாளர் கவிஞர் கோவி. மகாவிஷ்ணு  வரவேற்புரை நிகழ்த்தினார். தலைவர் பாவலர் சுந்தர பழனியப்பன்  தொடக்கவுரை நிகழ்த்தினார். செயலாளர் நாவலர் முத்துக்குமார் அவர்கள் நோக்க உரை நிகழ்த்தினார். ஆலோசகர் சந்தானம் அய்யங்கார் மகிழ்வு உரை நிகழ்த்தினார் பொருளாளர் இராம. சுதாகரன் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார்.


விழாவில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களின் பெயரன் கோவை குலசை வேலுப்பிள்ளை  நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் அவர்களின் பேயரன் இரா.அ.பழனியப்பன்  புதுச்சேரி கவிஞாயிறு வாணிதாசன் அவர்களின் பெயர்த்தி  நல்லாசிரியர் ஜா.வளர்மதி முருகன் அவர்களும் அனைத்துலக பொங்குதமிழ் சங்கத்தின் பொருளாளர் நல்லாசிரியர்பொன்.ஆதவன் ஆகியோர் கலந்துகொண்டு விருது வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்கள்.


விழாவில் ஆலோசகர் யாமினிமூர்த்தி வியாபாரிகள் சங்க தலைவர் வீரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்  நிகழ்வுகளை நிர்வாக செயலாளர் கவிஞர் லட்சுமி பாண்டுரங்கன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். பண்ருட்டி சாதனையாளர்கள் திருவாளர்கள் சிவக்குமார் குருஜி , அய்யனார்,நிர்வாகிகள் பண்ருட்டி இஸ்லாமிக் பைதுல் மால்டி ரஸ்ட்,‌‌ பா‌.ராஜேஷ், ர.முத்துக்குமரன், ப.ரவிச்சந்திரன் இரா முருகன்.,திருமலை, ஜீவா,காவியா,மதுமிதா,பிரசன்னசிவா,நந்தகுமார் ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

உலக புத்தகத்தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியை நிர்வாகச் செயலாளர் கவிஞர் லட்சுமி பாண்டுரங்கன் நெறியாளுகை செய்தார்.செம்மேடு கிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்.


செய்தியாளர்;- வா. சீராளன்

No comments:

Post a Comment

*/