காட்டுமன்னார்கோவில் குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 25 April 2022

காட்டுமன்னார்கோவில் குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

குமராட்சியில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் முருகவேல் தலைமை தாங்கினார்.விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு  சிதம்பரம் மற்றும்  மகாராஜன் சிபிஐ நகர கிளை செயலாளர்  காந்திதாஸ்   ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஆர்ப்பாட்டத்தில் விளக்கவுரை  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு டி மணிவாசகம் மற்றும் மாவட்ட நிர்வாகக்குழு ஏபி நாகராஜன் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏகே சுப்பிரமணியன் மற்றும் ஜெயராமன் ஆனந்தராஜ் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் மற்றும் ரூபாய் 281 முழுமையாக  சம்பளம் வழங்க வேண்டும்  


மேலும்  கூட்டத்தில் நூறு வேலை  காலையில் 7 மணிக்கு என்பதை 9 மணியாக நிர்ணயம் செய்திட வேண்டும்.  காட்டுமன்னார்கோவில் மட்டத்திலுள்ள அனைத்து சாலைகளும் புரணமைத்து  தரவேண்டும் 100 நாள் வேலைக்கான அடையாள அட்டை விண்ணப்பித்த  அனைவருக்கும் உடனடியாக வழங்க வேண்டும்.வஊசி நகரில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் உடனே வழங்க வேண்டும்  என கோரி பேசினார்கள்.


நிகழ்ச்சியில் அஞ்சாப்புலி குஞ்சிதபாதம் விநாயகமூர்த்தி அய்யப்பன் சந்தை காசிநாதன் லட்சுமணன் திருமாவளவன் முரளிதரன் பூபாலன் குணசேகரன் ராமலிங்கம் கருப்பையின் பயணிகள் மற்றும் செல்வராஜ் காந்தி இளங்கோவன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினார்கள் பின்பு அனைவரும் கலைந்து சென்றனர் முடிவில் குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை அடங்கிய மனுக்கள் கொடுக்கப்பட்டது


செய்தியாளர்: கே, பாலமுருகன்

No comments:

Post a Comment

*/