கடலூர் மாவட்டம்,பண்ருட்டி அடுத்த சன்னியாசி பேட்டை ஊராட்சியில் வட்டார சுகாதார திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆத்மா குழு தலைவரும், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் டாக்டர். மீரா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ஆறுமுகம், மருத்துவ திட்ட அலுவலர் கௌதம், முன்னாள் அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் பலராமன், சன்னியாசி பேட்டை பஞ்சாயத்து தலைவர் முத்துக்குமார், ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பொது மருத்துவம், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், கண் குறைபாடு, தோல் நோய்கள் ஆகிய பிரிவுகளில் பொதுமக்கள் சிகிச்சை பெற்றனர். மேலும் இம்முகாமில் அறுவை சிகிச்சை தகுதி உள்ளவர்கள் தமிழ்நாடு அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்தனர்.
இதில் அண்ணாகிராமம் ஒன்றிய நிர்வாகிகள் ராமு, ராஜசேகர், ஜெயபால், கருணாநிதி, கிருஷ்ணமூர்த்தி, கலீல் ரகுமான், கந்தன், சதாசிவம், கண்ணன், ஞானவேல்,அழகேசன், ஜேசுதாஸ், துணைத் தலைவர் கவிதா ரமேஷ், ஊராட்சி செயலாளர் சுதா, கடலூர் எம்பி நேர்முக உதவியாளர் நடராஜன், மாவட்ட விவசாய துணை அமைப்பாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர்கள் சத்யநாராயணன், ரமேஷ், பிரேம் மற்றும் அறுபடை மருத்துவக்கல்லூரி மருத்துவ குழு மற்றும் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் 1000க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
செய்தியாளர்; வா. சீராளன்.


No comments:
Post a Comment