கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த தாழநல்லூர் கிராமத்திற்கு சொந்தமான குளத்தை சுற்றி தென்னை மரம், மாமரம், இலுப்பை மரம், ஆலமரம், அரசமரம் என மூன்று தலைமுறையாக இருந்து வரும் நிலையில்,
குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் விதத்தில் மரத்தை வெட்டியதாக கூறி விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு
மரங்களை வெட்ட அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீதும் அதற்கு உடந்தையாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தமிழர் பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முருகன்குடி முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அங்கு வந்த வட்டாட்சியர் தனபதி மரங்களை வெட்டியவர்கள் மீதும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மரங்கள் வெட்டுவதை தடுத்து நிறுத்தப்படும் என்றும் கூறியதால் அனைவரும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதில் RMPI கட்சியின் மாவட்ட செயலாளர் கோகுலகிறிடீபன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் கதிர்காமன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்; இரா.சீனிவாசன்.

No comments:
Post a Comment