புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இளைஞர்களுக்கு வேலை கொடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 April 2022

புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இளைஞர்களுக்கு வேலை கொடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி


புதுச்சேரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இளைஞர்களுக்கு வேலை கொடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது.


2022 ஏப்ரல் 21 முதல் மே 01 வரை  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநிலக் குழு மூலம் தமிழகத்தில் சென்னை கன்னியாகுமரி கோவை புதுச்சேரி என நான்கு முனைகளில் இருந்தும் சைக்கிள் பேரணி செல்ல திட்டமிடப்பட்டது.


 இதனை அடுத்து புதுச்சேரியில் இருந்து கடந்த 20.04. 2022 அன்று புதுச்சேரியில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டு வடலூரில் நோக்கி இன்று வந்தடைந்தது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பபை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தண்டபாணி ஒன்றிய உறுப்பினர் அழகுமுத்து கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் சீனுவாசன் வடலூர் நெய்சர் சிஐடியு தலைவர் டி ஆர். ராமலிங்கம் DYFI மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் தங்க.ஜோதிமணி மற்றும் வடலூர் மாதர் சங்கத்தினர் இணைந்து ஒன்றுகூடி வரவேற்றனர்.


வடலூர் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்த சைக்கிள் பேரணியை தொடர்ந்து ஒன்றிய அரசை கண்டித்து இளைஞர்களுக்கு வேலை கொடு என்ற தலைப்பில் ஒன்றிய அரசின் அவலங்களை எடுத்துரைத்து பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது பின்பு கூட்டத்தின் மத்தியில் உரையாற்றிய DYFI யின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் அவர்கள் கூறுகையில் புதுச்சேரியில் தொடங்கிய எங்கள் பயணம் திருச்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் இதில் பண்ருட்டி வடலூர் மார்க்கம் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும் அதனை சரிசெய்ய அரசு எந்த நடவடிக்கையும் இன்றுவரை மேற்கொள்ளவில்லை எனவும் இன்றுவரை கடந்த 2 மாதங்களில் பத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவித்தார்.


மேலும் இளைஞர்களுக்கு வேலை வழங்கக் வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தினார்.

செய்தியாளர்; தே. தனுஷ்.

No comments:

Post a Comment

*/