சிதம்பரம் பஸ் நிலையம் அருகே பாலமான் ஓடை உள்ளது. இதில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வேறு பகுதியில் குடியிருப்பு மற்றும் பட்டா வழங்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம்,சிதம்பரம் பஸ் நிலையம் அருகே பாலமான் ஓடை உள்ளது.இந்த ஓடையின் கரையோரம் வசிக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த மக்கள் தங்களின் வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்பு பகுதியாக கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வசித்து வருகின்றனர்.
தற்போது பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பாக புறம்போக்கு ஆக்கிரமிப்பு பகுதிகளை அப்புறப்படுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டது இதனை ஒட்டியது.
ஏற்கனவே பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பாக 1 மாத காலம் அவகாசம் கூடுத்த நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் பாலமான் ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள வீடுகளை காலி செய்து தந்தனர்.
பிறகு மீண்டும் பொதுப்பணித்துறை ஆக்கிரமிப்பு குடியிருப்பு பகுதிகளை மொத்தமாக காலி செய்ய வேண்டும் வலியுறுத்தியது. ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதை கண்டித்து அப்பகுதியில் பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் காந்தி சிலை அருகே பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் துப்புரவு பணிகளும், தினக்கூலிகளாக மற்றும் தங்களால் இயன்ற வேலைகளை செய்து வருகின்றன, குடியிருப்புகளை காலி செய்ய சொன்ன நிலையில் தங்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறி மனமுடைந்தனர்.மேலும் ஐந்து நாட்கள் கால அவகாசம் பொதுப்பணித்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
வாடகை வீட்டில் குடியேறலாம் என்றால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என ஒதுக்கப்படுதாகவும் தங்களுக்கு வேறு ஒரு பகுதியில் குடியிருப்புகளை வழங்கி பட்டா வழங்குமாறு மிகத் தாழ்மையுடன் மாவட்ட ஆட்சியர் அவர்களையும் முதல்வர் அவர்களுக்கும் கோரிக்கை வைத்தனர்.

No comments:
Post a Comment