முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 April 2022

முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் !!!

கண்டப்பங்குறிச்சி பவானி கல்வி நிறுவனத்தில் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம், வேப்பூர் அருகிலுள்ள கண்டபங்குறிச்சி பவானி கல்லூரியில் நடைபெற்ற மருத்துவமுகாமிற்கு, நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் தமிழரசன் தலைமை தாங்கினார். உதவி மருத்துவர் பிரசன்னக்குமாரி வரவேற்றார்.


 பவானி கல்வி நிறுவனங்கள் நிர்வாக அலுவலர் சடையமுத்து, உதவி மருத்துவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முகாமில் பத்து கர்ப்புணிகளுக்கு தாய்சேய் நல பெட்டகமும், பத்து நபர்களுக்கு மூக்கு கண்ணாடியம் வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில் நல்லூர் ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் மாரிமுத்தாள் குணா, ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், தி.மு.க., நெசவாளரணி மாவட்ட துணை அமைப்பாளர் அன்பழகன்,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாபு, தனசேகர், ராஜா, கோ.கொத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமாரி ரகுநாதன், திமுக கிளை செயலர்கள் வண்ணாத்தூர் செந்தில், மேமாத்தூர் பெருமாள்,பிஞ்சனூர் பன்னீர்செல்வம், சேப்பாக்கம் ஞானசேகரன்,செந்தில், மற்றும் செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/