கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது முதலாமாண்டு சேர்ந்து உள்ள மாணவர்கள் மட்டும் அரசு கல்லூரிகளை போல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது மற்ற வகுப்புகளுக்கு 4 லட்ச ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது ஒரே கல்லூரியில் இரு வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படும் கண்டித்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி முன்பு ஒன்றுதிரண்டு 13 நாட்களாக மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் கைகளில் பதாகையை ஏந்தியபடி தமிழக அரசுக்கு கவனத்தை ஈர்க்கும் வகையில் அறவழியில் போராட்டம் நடத்தினார்கள்.
அதன் ஒரு பகுதியாக அனைத்து மாணவர்களும் தங்களது கைகளால் இரத்தத்தினால் "அரசு மருத்துவ கல்லூரியில் அரசு கட்டணம் வேண்டும்" என பதாகையில் எழுதி தமிழக முதல்வர் ஐயா எங்களுக்கு உதவுங்கள் என்று கருப்பு கொடி ஏந்தி அறவழியில் போராட்டம் நடத்தினார்கள்.
அரசு கல்லூரிகளை போலவே ஒரே விதத்தில் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment