புவனகிரி அருகே சீராளன் கல்வி அறக்கட்டளக்கு கிராம மக்கள் வரவேற்பு !!!!
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சொக்கன் கொல்லை கிராமத்தில் தாய் தந்தையற்ற ஊனமுற்ற வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் 50க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்களை கண்டறிந்து பரிட்சை அட்டை ஜாமென்ட்ரி பாக்ஸ் நோட் பேனா மற்றும் இதர கல்விக்கு தேவையான உபகரணங்களை சீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளையின் நிறுவனர் பேராசிரியர் முனைவர் ஜோதிமணி சீராளன் மாணவர்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் சொக்கன் கொல்லை கிராம ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் இளங்கோவன் பாலமுருகன் சபா திருநாவுக்கரசு மற்றும் கிராம பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு கிராம நிர்வாகத்தின் சார்பாகசீராளன் அறக்கட்டளை நிறுவனருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
செய்தியாளர்; வீ. சக்திவேல்

No comments:
Post a Comment