கணவனை சேர்த்து வைக்க கோரி முதல் மனைவி விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணா!!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 April 2022

கணவனை சேர்த்து வைக்க கோரி முதல் மனைவி விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணா!!!!

கணவனை சேர்த்து வைக்க கோரி முதல் மனைவி விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.


கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் அடுத்த சாத்தமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், (இருளர்) பெரம்பலூர் மாவட்டம், திருவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சுபா (நாயுடு) இருவரும் விருத்தாசலம் அடுத்த சாவடிக்குப்பம் செங்கல் சூளையில் கடந்த 8 வருடமாக வேலை செய்து வந்தனர்.


இந்த நிலையில் வெங்கடேசன் சுபா இருவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு செங்கல் சூளை உரிமையாளர் தலைமையில் திருமணம் நடைபெற்று அதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. 


இந்த நிலையில் வெங்கடேசன் தினமும் குடித்துவிட்டு சுபாவை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார், இதனை தாங்க முடியாமல் சுபா தனியாக வீடு வாடகை எடுத்து தன் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். 


கடந்த 2021 ஆம் ஆண்டு கே.தொழூர் கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி (இருளர்) என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். வெங்கடேசன் மகாலஷிமியை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட தகவல் அறிந்த சுபா விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்ததன் பேரில் வெங்கடேசனை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் சுபா அளித்த புகாரின் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க மறுத்ததால் பாதிக்கப்பட்ட சுபா தன் குழந்தையுடன் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

அதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ரேவதி, சுபாவின் புகாரை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சுபா தர்ணா போராட்டத்தை கைவிட்டார், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்; இரா.சீனிவாசன்.

No comments:

Post a Comment

*/