தென்மேற்கு வங்க கடல் அதனை ஒட்டிய வட இலங்கை கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கன மழையும் பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் இரவு மற்றும் பகல் நேரத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதேபோல் வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
இருப்பினும் இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேப்பூரில் 44.00 மில்லி மீட்டர் மழை பெய்தது.
மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
| கடலூர் | ||
|---|---|---|
| தாலுகா | ஆய்வு நிலையம் | மழை அளவு (மி.மீ) |
| வேப்பூர் | மாத்தூர் | 44.00 |
| திட்டக்குடி | பெலாந்துறை | 27.60 |
| விருதாச்சலம் | குப்பநத்தம் | 26.20 |
| விருதாச்சலம் | விருதாச்சலம் | 25.00 |
| ஸ்ரீமுஷ்ணம் | ஸ்ரீமுஷ்ணம் | 17.20 |
| திட்டக்குடி | கீழ் செருவாய் | 15.00 |
| திட்டக்குடி | தொழுதூர் | 11.00 |
| வேப்பூர் | வேப்பூர் | 10.00 |
| வேப்பூர் | காட்டுமயிலூர் | 7.00 |
| பண்ருட்டி | பண்ருட்டி | 2.00 |
| காட்டுமன்னார்கோயில் | லால்பேட்டை | 2.00 |
| காட்டுமன்னார்கோயில் | காட்டுமன்னார்கோயில் | 1.00 |

No comments:
Post a Comment