கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த விருப்பாட்சி ஊராட்சியில் பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இக்கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னதாக கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தொடர்ச்சியாக விருப்பாச்சி ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் அவர்கள் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் கடித மடலை வாசித்தார்,பின்னர் வேளாண் இணை இயக்குனர் பாலசுப்பிரமணியம் அவர்கள் இணை இயக்குனர் மகளிர் செந்தில் வடிவு அவர்களும் கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் அவர்களும் துறைசார்ந்த அரசு திட்டங்களை கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் அவர்கள் நீடித்த வளர்ச்சி இலக்கு அடைவதை குறித்து கிராம சபை கூட்டத்தில் உறுதிமொழியை வாசித்தார் பின்னர் விருப்பாச்சி ஊராட்சி செயலர் கூட்டப் பொருள் குறித்து முன்மொழிந்தார்
இதனைத் தொடர்ந்து ஊராட்சி காண வளர்ச்சிப்பணிகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியன் அவர்கள் எடுத்துரைத்தார்
நிறைவாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தலைமை உரை யாற்றினார் அவர் பொதுமக்களின் மத்தியில் பேசுகையில் விருப்பாட்சி மக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதிக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இப்பகுதி தேவையான திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவித்து .
வருவாய்த்துறையின் வாயிலாக 4 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு உதவித்தொகைக்கான ஆணையையும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் மருந்து தெளிப்பான் தோட்டக்கலைத்துறை வாயிலாக மூன்று பயனாளிகளுக்கு ஒட்டுச் செடிகள் மகளிர் திட்டத்தின் வாயிலாக 8 மகளிர் சுய உதவிக்குழு வங்கிக் கடனாக ரூ36,30,000 ஆணையையும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஐந்து பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையையும் வழங்கி சிறப்பித்தார்.
பின்னர் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். நிகழ்வின் இறுதியில் பள்ளி வளாகத்தில் இலவச மரக்கன்றுகளை நட்டுவைத்து தொடங்கிவைத்தார் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு குறிஞ்சிப்பாடி ஒன்றிய திமுக சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.
செய்தியாளர்; தே . தனுஷ்

No comments:
Post a Comment