கடலூர் மாவட்டம்,சிதம்பரம் நகராட்சி வளர்ச்சி குறித்து ஆய்வு கூட்டம் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது நகரமன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.ஆணையாளர் அஜிதா பர்வீன் பொறியாளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக தமிழக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் கலெக்டர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு நகராட்சி வளர்ச்சி குறித்து கருத்துரைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவித்தனர் ரமேஷ் ஜேம்ஸ் விஜயராகவன் அப்பு சந்திரசேகர் ராஜன் ஜெயசித்ரா பாலசுப்ரமணியன் இந்துமதி அருள் சரவணன் சுதாகர் மக்கீன் உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர் அதேபோல் சிதம்பரம் நகராட்சி பல்வேறு வளர்ச்சித் திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் 43 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் சிதம்பரத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட மற்றும் குளங்களை தூர்வாரும் பணிகள் என்றும் மழைநீர் வடிகால் பணிகளையும் அய்வு செய்து கருத்துக்கள் வழங்கினார்கள் நிகழ்ச்சியில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment