புவனகிரி அருகே வட தலைகுளம் கிராம ஊராட்சியில் பயனற்ற நிலையில் ஆபத்தான சூழலில் காணப்படும் பழுதடைந்த டேனிடா சுகாதார நிலையம் கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்!!!
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வட தலைக்குளம் ஊராட்சியில் நீண்ட நெடிய காலமாக பாழடைந்து பயனற்ற நிலையில் டேனிடா துணை சுகாதார நிலையம் அடர்ந்த காட்டுடன் உள்ளது. இங்கு தண்ணீர் வசதிக்காக ஆழ்துளை கை தண்ணீர் பம்பு அமைக்கப்பட்டது, இப்பொழுது அந்த கை தண்ணீர் பம்பு நீக்கப்பட்டு ஆபத்தான நிலையில் திறந்து உள்ளது.
மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட மின்சார ஒயர்கள் முற்றிலும் பழுதடைந்த மின்கசிவு ஏற்றப்பட்டு ஆபத்தான நிலையில் காட்சி அளித்து வரும் டேனிடா துனை சுகாதார நிலையம் அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகள் இடத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள டேனிடா துணை சுகாதார நிலைய கட்டிட வளாகத்தில் அடர்ந்த முள்புதர்கள் இருப்பதனால் விஷத்தன்மையுள கொடிய பாம்புகள் அதிகமாக பொதுவெளியில் நடமாடுகின்றன.
பயனற்ற மருத்துவமனைக்கு மின்சார இணைப்பு ஆழ்துளை போர் ஆபத்தான நிலையில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கண்டு கொண்டு பழுதடைந்த கட்டடத்தை இடித்து பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் அப்பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையாக அமைத்துத் தரும்படி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.


No comments:
Post a Comment