வடலூர் புதுநகர் அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம்.
கடலூர் மாவட்டம் வடலூர் புதுநகர் உள்ள அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் பள்ளி தலைமையாசிரி மாலா தலைமையில் நடைபெற்றது.
பள்ளியின் சக ஆசிரியர்களான ஜெயராக்கினி அருள் சர்மிளா குணசாந்தி ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மைக் குழு குறித்து எடுத்துரைத்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் வடலூர் நகர மன்ற வார்டு உறுப்பினர்கள் விஜயகுமாரி மற்றும் சுகந்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் மொத்தம் 20 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வல ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment