வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது கிடைத்த புதையல்!!!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 April 2022

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது கிடைத்த புதையல்!!!!!

வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய போது புதையல் கிடைத்ததை வீட்டின் உரிமையாளர் திட்டக்குடி வட்டாட்சியர் அவரிடம் கொடுத்தார். 


கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் மகன் ராமசாமி  என்பவர் புதிய வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது குழியில் ஏதோ ஒரு மண் தாழி கடப்பாரையில் தட்டுப்பட்டுள்ளது. தொடர்ந்து அதனைத் தோண்டி எடுத்து கிடைக்கப் பெற்ற உலோக பொருட்களை திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.


இது குறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், சிலை மற்றும் உலோக பொருட்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, இது எந்தவிதமான உலோகத்தால் செய்யப்பட்டவை, எத்தனை வருடங்களுக்கு முன்பு செய்யப்பட்டவை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்த பின்புதான் முழு விவரம் தெரியவரும் என்றனர். 
 

மேற்படி புதையல்  பொருளை கடலூர் அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று திட்டக்குடி வட்டாட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

*/