பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 22 April 2022

பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம்

 கடலூர் மாவட்டம்: பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடக்கிறது.


கலெக்டர் கி.பாலசுப்ரமணியம் செய்திக்குறிப்பு:
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் இயக்குனர் உத்தரவின் பேரில், சிறப்பு கிராம சபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் -24 ஆம் தேதியன்று தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. 



இதன் பகுதியாக அனைத்து கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Plan) குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டம் 24.04.2022 அன்று முற்பகல் 11.00 மணிக்கு நடத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இக்கூட்டத்தில், நீடித்த வளர்ச்சி இலக்குகளாக கிராம ஊராட்சி வறுமை ஒழிப்பு, ஊராட்சிகளில் உள்ள அனைத்து வயதினரும் உடல் நலத்துடன் நலவாழ்வு வாழ்தல், அனைத்து குழந்தைகளும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வது.அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துதல் உட்பட 12 நீடித்த வளர்ச்சி தொடர்பான பொருள்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

மேலும் இச்சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் தவறாமல் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

*/