பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: 3 போ் குண்டர் தடுப்புக் காவலில் கைது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 April 2022

பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: 3 போ் குண்டர் தடுப்புக் காவலில் கைது


கடலூர் மஞ்சக்குப்பம் தனியார் கடையில் வேலை செய்து வந்த நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த (21 வயது) இளம்பெண் கடந்த 28.03.2022 ஆம் தேதி இரவு வேலை முடித்து வீட்டுக்கு தனது காதலன் சரவணன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கம்மியம்பேட்டை அரிஸ்டோ பப்ளிக் பள்ளி அருகிலுள்ள முழுமையாக கட்டி முடிக்கப்படாத பழைய கட்டிடத்தில் தனியாக பேசிக் கொண்டிருந்தபோது 


அந்த வழியாக வந்த 3 நபர்கள், அங்கு பேசிக்கொண்டு இருந்த இருவரையும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியும், இருவர் இளம்பெண்ணின் காதலன் சரவணனை கெட்டியாக பிடித்துக்கொண்டு, அவர் வைத்திருந்த செல்போன், பணம் ரூபாய் 200பறித்து வைத்துக்கொண்டும்.


அதில் ஒருவன் அந்த இளம் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த புகார் சம்பந்தமாக, திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய குற்றஎண் 295/2022 பிரிவு  படி வழக்குபதிவு செய்யப்பட்டது. 


இவ்வழக்கில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கரிகால் பாரி சங்கர் அவர்கள் மேற்பார்வையில் திருப்பாதிரிபுலியூர் காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா அவர்கள் விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட திருப்பாதிரிபுலியூரை சேர்ந்த குற்றவாளிகள் 1ஜெயக்குமார் மகன் கிஷோர்(வயது 19), 2. நாகப்பன் மகன் சதீஷ் (எ) சதீஷ்குமார்( வயது 19)  புதுபாளையத்தைச் சேர்ந்த   3. ஷாஜகான் மகன் ஆரிப் (எ) சையது ஆரிப் (வயது 19) ஆகியோர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 


இவர்களின் குற்றச்செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. சக்திகணேசன் IPS அவர்களின் பரிந்துரையின்பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு. K. பாலசுப்பிரமணியம் IAS அவர்கள் ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக்காவலில்வைக்க ஆணையிட்டதின்பேரில் குற்றவாளிகள் ஓராண்டு குண்டர் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்கள்.

No comments:

Post a Comment

*/