கடலூரில் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 April 2022

கடலூரில் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.


கடலூர் மாவட்டம் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம்-2009 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் தொடக்கப்பள்ளிகள் மற்றும்  மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் (LKG) 25%இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கியாலகப்ரமணியம் அவர்கள் அறிவித்துள்ளார்.

இது பற்றி வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்;-

சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் (NURSERY PRIMARY / MATRIC) நலிவடைந்த மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் எல்.கே.ஜி பிரிவில் (LKG STD) 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை கடந்த 2013-2014 கல்வியாண்டு முதல் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையில் 2018-2019 ஆம் கல்வியாண்டு முதல் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் இணையதளத்தில் (Online) அறிமுகம் செய்யப்பட்டு தற்போது 2022-2023 ஆம் கல்வியாண்டில் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிக்கல்வித் துறையின் rte.tnschool.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப்பதிவு 20.04.2022 முதல் 18.05.2022 முடிய இணைய வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.


கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் தொடக்கப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25% இடங்களை பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட வேண்டும் தெரிவிக்கப்படுகிறது.நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி வகுப்பிற்கு (LKG STD) விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2018 முதல் 31.07.2019-ற்குள் பிறந்திருக்க வேண்டும்.

மேலும் குழந்தையின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.குழந்தையின் வயதை நிரூபிப்பதற்கு (பிறப்புச்சான்று, மருத்துவச்சான்று, அங்கன்வாடி பதிவேடு நகல்) என ஏதேனும் ஒரு சான்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். குழந்தைகளுக்கு சேர்க்கை கோரும் பள்ளி பெற்றோரின் இருப்பிடத்திலிருந்து 1 கீ.மீ. சுற்றளவிற்குள் இருக்க வேண்டும். இதற்கு இருப்பிடச்சான்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும் ஆண்டு வருமானம் (ரூ.2,00,000) இரண்டு இலட்சத்திற்கு கீழ் உள்ள அனைத்து பிரிவினருக்கு நலிவடைந்த பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்கலாம். 


அதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானச்சான்று சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் பெற்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் விண்ணப்பிக்க சாதி சான்று உரிய அலுவலர்களிடமிருந்து பெற்று பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.


வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு பிரிவினர்களான ஆதரவற்றவர், மாற்றுத்திறனாளி குழந்தை, மூன்றாம் பாலினத்தார், HIV பாதிக்கப்பட்டவர்களின் குழந்தை, துப்புரவு தொழிலாளிகளின் குழந்தை போன்றோர்களுக்கு உரிய அலுவலரால் வழங்கப்பட்ட சான்றினை பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். 

வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர்களின் பெற்றோர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு குலுக்கல் (Lot System) நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.


மேற்காணும் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் தொடக்கப்பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேரும் வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள பொதுமக்கள்/ பெற்றோர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

No comments:

Post a Comment

*/