இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில்:-
2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுபான (சில்லரை விற்பனை) விதி எண் 12, ஆணையர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, ஆணையர் சென்னை,அவர்களின் கடித எண். P&E 2(1)/129/2017, நாள்: 25.04.2022 நாளிட்ட கடிதத்தில் 01.05.2022 (ஞாயிற்றுக்கிழமை) மே தினம் என்பதால் அன்றைய தினம் அனைத்து மதுபான கடைகளான FL2/ FL3, FLII அரசு மதுபான கடைகள் மற்றும் அனைத்து உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கடலூர் மாவட்டத்தில் செயல்படும் FL2 FL3, FLII அரசு மதுபான கடைகள் மற்றும் உரிமம் பெற்று இயங்கும் அரசு மதுபானக்கூடங்கள் மூடப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி தினத்தன்று அரசு மதுபான கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலோ,அரசு பார்கள் மற்றும் எப்.எல்-2 மற்றும் எப்.எல்.3 பார்களில் மதுபானங்கள் விற்றாலோ டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் எப்.எல்-2 மற்றும் எப்.எல்.3 உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்

No comments:
Post a Comment