விருத்தாசலத்தில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவதற்காக நாஞ்சில் சம்பத் வந்த காரினை தடுக்க முயன்ற போது காவல்துறைக்கும் பிஜேபியினருக்கும் இடையே மோதல்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நாஞ்சில் சம்பத் வருகை புரிந்தார்.
அப்போது புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனை தரக்குறைவாக பேசிய நாஞ்சில் சம்பத் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என முழக்கமிட்டு காரை வழி மறித்து தாக்க முயன்றனர்.
அப்போது காவல்துறையினருக்கும் பிஜேபியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது நீண்ட போராட்டத்திற்கு பிறகு நாஞ்சில் சம்பத் வந்த கார் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டது.
பின்னர் பிஜேபியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர்; இரா.சீனிவாசன்.

No comments:
Post a Comment