கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதிக்கு உட்பட்ட நெல்லிக்குப்பம். பண்ருட்டி.அண்ணாகிராமம் ஒன்றியம் பட்டாம்பாக்கம் பேரூராட்சி,புதுப்பேட்டை பேரூராட்சி,ஆகிய பகுதிகளில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் அவர்கள் தலைமையில்.டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அனைத்து பகுதிகளிலும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து மாணவ மாணவிகளுக்கு நோட்டு பென்சில் பேனா போன்ற உபகரணங்கள் அனைத்தும் வழங்கினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்து சென்னையில் உள்ள ம
ணிமண்டபத்தில் வெண்கல திரு உருவ சிலை அமைத்து தருகிறோம் என்று கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
நெல்லிக்குப்பம் நகர செயலாளர்கள். புலிக்கொடியான் திருமாறன். மாநில இளம் எழுச்சிப் சிறுத்தைபாசறை துணை செயலாளர் சிவக்குமார்.நகர மன்ற துணைத் தலைவர் கிரிஜா .ஆகியோர் முன்னிலை வகித்தனர் ,பண்ருட்டி நகர செயலாளர் கார்த்திகேயன் மாவட்டம் எழுச்சி பாசறை அமைப்பாளர் வெங்கடசாமி அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் கலியபெருமாள்..ஏராளமான விடுதலை சிறுத்தைகள் மாவட்ட நகர ஒன்றிய பேரூராட்சிக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்; வா.சீராளன்.



No comments:
Post a Comment