புவனகிரியில் திமுக மற்றும் திராவிடர் கழகத்தின் சார்பில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது !!!
கடலூர் மாவட்டம் புவனகிரியில் புரட்சியாளர் டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக மற்றும் திராவிடர் கழகத்தின் சார்பில் வெள்ளாற்று பாலத்தின் முகப்பில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் யாழ் திலீபன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக திமுக நகர கழக செயலாளரும் புவனகிரி பேரூராட்சி மன்றத் தலைவருமான பூக்கடை .கந்தன் புவனகிரி திமுக கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்பு புவனகிரி ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் வள்ளலார் பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இநிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செல்லப்பாண்டியன் ஆர் .பி . சண்முகம் கண்ணன் பிரகாஷ் அரவிந்தன் கே. எம். குமார் ஆசிர்வாதம் மகேஷ் பார்த்திபன் ஏ.பி. ராமதாஸ் சுரேஷ் மற்றும் திமுக . திராவிடர் கழக நிர்வாகிகள் ஆட்டோஓட்டுநர் உரிமையாளர் நலச்சங்க நிர்வாகிகள் குணா ராஜீவ்காந்தி அழகானந்தம் சிவக்குமார் ராஜ்குமார் பழனிச்சாமி பாலமுருகன் லட்சுமணன் பிரபாகரன் ஆகியோர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.செய்தியாளர் ; வீ. சக்திவேல்.



No comments:
Post a Comment