புவனகிரியில் அதிமுக சார்பில் புரட்சியாளர் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது!!!
கடலூர் மாவட்டம் புவனகிரியில் அதிமுக சார்பில் டாக்டர் அம்பேத்கர் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளாற்றின் முகப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான ஆ.அருண்மொழிதேவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்துலக எம்ஜிஆர் மன்றத் தலைவர் வழக்கறிஞர் முருகமணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன் நகர கழக செயலாளர் செல்வகுமார் புவனகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சி.என். சிவபிரகாசம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சீனுவாசன் ஊராட்சி கழக செயலாளர் ஜெயசீலன் ஒன்றிய மாணவரணி செயலாளரும் கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் பிரிதிவி புவனகிரி மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப செயலாளர் சபரி வாசன் ஒன்றிய ஓட்டுனர் அணிசெயலாளர் பிரகாஷ் பாலகிருஷ்ணன் கழக அனைத்து மட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர்; வீ. சக்திவேல்


No comments:
Post a Comment