எதிர்ப்பையும் மீறி கடலூரில் ரிலீஸ் ஆன 'எதற்கும் துணிந்தவன்': ரசிகர்கள் மகிழ்ச்சி. _ போலீஸ் பலத்த பாதுகாப்பு!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 11 March 2022

எதிர்ப்பையும் மீறி கடலூரில் ரிலீஸ் ஆன 'எதற்கும் துணிந்தவன்': ரசிகர்கள் மகிழ்ச்சி. _ போலீஸ் பலத்த பாதுகாப்பு!!


கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், வடலூர், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, பெண்ணாடம், நெல்லிக்குப்பம், திட்டக்குடி உள்ளிட்ட இடங்களில் 60 சினிமா தியேட்டர்கள் உள்ளன. இந்த நிலையில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் கடலூரில் உள்ள 3 தியேட்டர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 17 தியேட்டர்களில் நேற்று திரையிடப்பட்டது.
இதற்கிடையே சூர்யா நடித்திருந்த ஜெய்பீம் படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சை காட்சிகள் தொடர்பாக, பா.ம.க.வினர், எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தியேட்டர்களில் திரையிட அனுமதி வழங்கக்கூடாது என்று ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் மாவட்டத்தில் எதற்கும் துணிந்தவன் படம் திரையிட இருந்த அனைத்து தியேட்டர்களிலும் நேற்று முன்தினம் முதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பா.ம.க.வினரின் எதிர்ப்பையும் மீறி தியேட்டர்களில் நேற்று எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையிடப்பட்டது. இதையொட்டி அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 17 தியேட்டர்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவர்கள் தியேட்டர் நுழைவாயிலில் நின்று கொண்டு படம் பார்க்க வந்த பொதுமக்களை தீவிர சோதனைக்குப் பிறகே தியேட்டருக்குள் செல்ல அனுமதித்தனர். மேலும் தியேட்டருக்குள்ளும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த சம்பவத்தால் தியேட்டர்கள் இருக்கும் பகுதிகள் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது.


No comments:

Post a Comment

*/