சிதம்பரத்தில் தமிழர் தேசிய முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 11 March 2022

சிதம்பரத்தில் தமிழர் தேசிய முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் வன்கொடுமை தாக்குதலை கண்டித்து சிதம்பரத்தில் தமிழர் தேசிய  முன்னணியின் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

 சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பலம் மேடை மீது பக்தர்கள் உள்ளிட்ட யாரும் ஏறக்கூடாது என தீட்சிதர்கள் தடை விதித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து கோவில் சிற்றம்பல மேடையில் ஏறிய ஜெயசீலா என்ற பெண்ணை தீட்சிதர்கள் தடுத்து நிறுத்தி வெளியேற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை கண்டித்தும், சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வலியுறுத்தியும் தமிழர் தேசிய முன்னணி சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மண்டல பொறுப்பாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முத்தமிழ்மணி, பழமலை, கமலக்கண்ணன், வினோத், நகர தலைவர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் பாரதிசெல்வன் தொடக்க உரையாற்றினார். இதில் தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டன உரையாற்றினார். இதில் பலர் கலந்து கொண்டு கோஷமிட்டனர். 

செய்தியாளர்:p. ஜெகதீசன்

No comments:

Post a Comment

*/