கடலூரில் அதிகாரிகள் சோதனை அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்ற பேருந்துகளுக்கு அபராதம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 11 March 2022

கடலூரில் அதிகாரிகள் சோதனை அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்ற பேருந்துகளுக்கு அபராதம்

கடலூரில் தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்த போலீசார் பேருந்து டிரைவருக்கு அபராதம் விதித்தனர்.  கடலூரில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை நிறுத்தி, அவர்களுக்கு அறிவுரை கூறியும், எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். ஆனாலும் பேருந்துகளில் படிக்கட்டு பயணம் தொடர்கதையாகி வருகிறது.

 இந்நிலையில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் நேற்று கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 5 பேருந்துகளில், மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி வந்தனர். அந்த பேருந்துகளை நிறுத்திய போலீசார் மாணவர்களையும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கடுமையாக எச்சரித்து அந்த 5 பேருந்துகளுக்கும் தலா ரூ. 2500 அபராதம் விதித்தனர். மேலும் இனிமேல் இது போன்று அதிக அளவு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்

.

No comments:

Post a Comment

*/