திட்டக்குடி அருகே ஸ்ரீ கருப்பனார் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது!!!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கருப்பனார் அருள்மிகு ஸ்ரீ சங்கிலி கருப்பு மற்றும் பரிவார மூர்த்திகள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது நேற்று மாலை யாகசாலையில் முதல் கால பூஜையுடன் தொடங்கி கணபதி பூஜை கணபதி ஹோமம் திருவிளக்கு ஏற்றுதல் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால பூஜை நடைபெற்றது ,பின்னர் யாகசாலையில் இருந்து புனிதநீர் மேளதாளங்களுடன் கொண்டுவரப்பட்டு மூலவர் கருப்பனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: k.ஐாபர்
No comments:
Post a Comment