கடலூரில் மிக அதிக கனமழை மற்றும் வேகமன தரைக்காற்று வீச்சு.. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 6 March 2022

கடலூரில் மிக அதிக கனமழை மற்றும் வேகமன தரைக்காற்று வீச்சு..


தெற்கு வங்கக்‌ கடலின்‌ மத்தியப்‌ பகுதியில்‌ உருவான தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்தத்‌ தாழ்வு மண்டலமாகவலுப்பெற்று, வட தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வானிலை மையம்‌ தகவல்‌ தெரிவித்து இதையொட்டி, கடலூர்‌ துறைமுகத்தில்‌ வியாழக்கிழமை ஏற்றப்பட்டிருந்த ஒன்றாம்‌ எண்‌ புயல்‌ எச்சரிக்கை கூண்டு,
வெள்ளிக்கிழமை மாலை 3-ஆம்‌ எண்ணாக உயர்த்தப்பட்டது.
இதனால்‌ கடலூர்‌, விழுப்புரம்‌ மாவட்டங்களில்‌ மார்ச்‌(06/0//2022) இன்று மதியத்தில் இருந்து கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது மார்ச் 7, ஆகிய தேதிகளில்‌ மணிக்கு 45 கி.மீ. வேகத்தில்‌ தரைக்காற்று வீசக்கூடும்‌ என்றும்‌, இடையிடையே  75 கி.மீ அளவில் தரைக் காற்று வீசக்கூடும் என்றும் இந்த காற்றுடன் கூடிய மழையானது மார்ச்‌ 6 முதல்‌ 7-ஆம்‌ தேதி வரை கன முதல்‌ மிகக்‌ கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்‌ தகவல்‌ தெரிவிக்கப்பட்டது. இன்று அண்ணாமலை நகரில் 0.80 மி.மீ இதுவரை மழை பதிவாகி உள்ளது


No comments:

Post a Comment

*/