விருத்தாசலம் கோவில் கலசத்தை திருடியவர் ஒப்புதல் : அம்மா தலையில் பாரமாக இருப்பதாக முருகன் (கடவுள்)சொன்னதால் தான் கோவில் கலசத்தை எடுத்தேன் !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 5 March 2022

விருத்தாசலம் கோவில் கலசத்தை திருடியவர் ஒப்புதல் : அம்மா தலையில் பாரமாக இருப்பதாக முருகன் (கடவுள்)சொன்னதால் தான் கோவில் கலசத்தை எடுத்தேன் !!!

 

அம்மா தலையில் பாரமாக இருப்பதாக  முருகன் (கடவுள்)சொன்னதால் தான் கோவில் கலசத்தை எடுத்தேன் !!!விருத்தாசலம் கோவில் கலசத்தை திருடியவர் ஒப்புதல்.

கடலூர் மாவட்டம்,விருதாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் உள்ள 3 கலசங்கள் 28/02/2022நள்ளிரவில் மர்ம நபர்களால் திருடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் நள்ளிரவில் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர் மற்றும் 3 தனிப்படை போலீசார் தீவிரமாக  மர்ம நபர்களை தேடி வந்த நிலையில். நேற்று இரவு தனிப்படை விருதாச்சலம் பெரிய நகரில் பாழடைந்த வீட்டில் விருதகிரீஸ்வரர்  கோவிலில் திருடுபோன மூன்று கலசம் கண்டுபிடித்தனர் இதனைத் தொடர்ந்து கலசத்தில் திருடிய குற்றவாளி  ஒருவரை கைது செய்துள்ளனர். 3 கலசங்களை பறிமுதல் செய்து விருதாச்சலம் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.


இதனைக் குறித்து கலசங்களை திருடியவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர், இந்த விசாரணையில் "அம்மா தலையில் பாரமாக இருப்பதாக  முருகன் (கடவுள்)சொன்னதால்" தான் கோவில் கலசத்தை எடுத்தேன் !!!கலசத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.

No comments:

Post a Comment

*/