புவனகிரி வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அ.இ.தி.மு.க. எம்எல்ஏ ஆறுதல்... - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 4 March 2022

புவனகிரி வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அ.இ.தி.மு.க. எம்எல்ஏ ஆறுதல்...

 
கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், முகந்தெரியாங்குப்பம் கிராமத்தில் நேற்று நிகழ்ந்த வெடி விபத்தில் காயமடைந்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருபவர்களை கடலூர் மேற்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான  ஆ.அருண்மொழிதேவன், கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான  கேஏ.பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.  

அப்போது முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், புவனகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சீனிவாசன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் வாசுதேவன், ஊராட்சி கழக செயலாளர் ஜெயசீலன், ஒன்றிய குழு உறுப்பினர் லதா ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி செயலாளர் வீரமூர்த்தி, புவனகிரி ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் புருஷோத்தமன், சபரிராஜன், நிர்வாகிகள் சிவஞானம், வேலுப்பிள்ளை, வீராசாமி, செங்குட்டுவன், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெயஸ்ரீ, மருத்துவ அதிகாரி மருத்துவர் பாரி, மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

*/