விருதாச்சலத்தில் அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு விருத்தாம்பிகை அம்மன் கோபுரம் கலசத்தை திருடிய ஒருவரை போலீசார் கைது செய்து ம தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசத்தை மீட்டனர்.
இந்நிலையில் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் உள்ள 3 கலசங்கள் நள்ளிரவில் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. இந்த 3 கலசங்களும் 3 அடி உயரம் கொண்டவை என்றும், 3 கலசங்களிலும் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலில் இருந்து கலசங்கள் திருடப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் நள்ளிரவில் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர் மற்றும் 3 தனிப்படை போலீசார் தீவிரமாக மர்ம நபர்களை தேடி வந்த நிலையில்.இன்று தனிப்படை விருதாச்சலம் பெரிய நகரில் பாழடைந்த வீட்டில் விருதகிரீஸ்வரர் கோவிலில் திருடுபோன மூன்று கலசம் கண்டுபிடித்தனர் இதனைத் தொடர்ந்து கலசத்தில் திருடிய குற்றவாளி ஒருவரை கண்டுபிடித்து கைது செய்து 3 கலசங்களை பறிமுதல் விருதாச்சலம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது,
செய்தியாளர்:சி.கௌதமன்
No comments:
Post a Comment