கடலூர் மாவட்டம், சிதம்பரம் நாட்டியாஞ்லி அறக்கட்டளை சார்பில் தெற்கு வீதியில் 41- வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மஹா சிவராத்திரி நாளான நேற்று (01/03/2022) மாலை தொடங்கியது
சிதம்பரம் வி.எஸ் ட்ரஸ்ட் வளாகத்தில் துவங்கிய விழாவின் 3ம் நாள் விழா இன்று நடந்தது. நேற்றைய விழாவில் 6.15 க்கு பெங்களூரு திஷா ராவ் பரதம், 6.45 க்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைக் கல்லூரி மாணவர்களின் பரதம், , 7.50 மும்பை நிருத்தியரஞ்சனி அகாடமி மாணவிகளில் பரதம், , 8.25 க்கு கொல்கொத்தா சோஹினி பைனே கதக் நடனமும், 9.05 க்கு பிரகா பெஸ்ஸில் ராதாவின் பரதம், 9.35 ஹீக்ளி தனிமா பர்தன் பரதம் நடைபெற்றது.
கடலூர் அஇஅதிமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கேஏ.பாண்டியன் அவர்கள் இன்று குமராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் அவர்களுக்கும் சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் தெற்கு வீதியில் நடைப்பெற்று வரும் 41 வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவின் 3 நாள் நிகழ்ச்சியில் நாட்டிய அஞ்சலி செய்த கலைஞர்களுக்கு பொன்னடை அணிவித்து பதக்கங்கள் மற்றும் நினைவு பரிசினை ஆகியோர் வழங்கினார்கள்.
செய்தியாளர்: K. அருள்ராஜ்
No comments:
Post a Comment