இந்திய அரசு,நேரு யுவகேந்திரா சங்கதன், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், கடலூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் நல சங்கம் மற்றும் டாக்டர் பிதன் சந்திர ராய் இளையோர் நலசங்கம் இவர்களுடன் இணைந்து சாவித்திரிபாய் புலே இளையோர் நல சங்கம் இணைந்து உலக மகளிர் தினத்தை போற்றும் வகையில் கடலூர் மாநகராட்சியின் திருப்பாப்புலியூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் திருமதி. P. கவிதா, காவல் ஆய்வாளர் அவர்களுக்கும் திருமதி. யாஸ்மின் துணை காவல் கண்காணிப்பாளர் (Trainee) அவர்களுக்கும் நேற்று நடைபெற்ற உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்மையை போற்றும் வகையில் இவர்களுக்கு கடலூர் மாவட்டத்தில் முன்னாள் தேசிய இளையோர் சேவைத் தொண்டர்கள் R.S. யுவப்பிரியா,R. சாம்பசிவம், இளைஞர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெரியார் கலைக் கல்லூரியில் சமூகப்பணி துறை மாணவர்களும் இணைந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதனுடன் நேரு யுவ கேந்திராவின் ஜல் சக்தி அபியான் நிகழ்ச்சியின் துண்டு பிரச்சாரத்தை அவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வும் கொடுக்கப்பட்டது.
செய்தியாளர்;P. ஜெகதீசன்
No comments:
Post a Comment