அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம், பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் பன்னாட்டுப் கவியரங்கமானது 08/03/2022 திங்கள் கிழமை மாலை 6.00 க்கு பண்ணுருட்டி பாவலர் சுந்தர பழனியப்பன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ் சான்றோர் பெருமக்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.பண்ருட்டி செந்தமிழ் சங்கத்தின் செயலாளர் பண்ணுருட்டி நாவலர் முத்துக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.அனைத்துலகப் பொங்குதமிழ் சங்கத்தின் தலைவரும் பண்ணுருட்டி செந்தமிழ் சங்கத்தின் தலைவருமான பண்ணுருட்டி மதிப்புறு முனைவர் பாவலர் சுந்தர பழனியப்பன் தலைமையுரை நிகழ்த்தினார். அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கத்தின் செயலாளர் செங்கல்பட்டு முனைவர் இரா. ஹேமலதா தொடக்க உரை நிகழ்த்தினார். அனைத்துலக பொங்குதமிழ் சங்கத்தின் பொருளாளர் திண்டிவனம் மதிப்புறு முனைவர் நல்லாசிரியர் பொன்.ஆதவன் நோக்க உரை நிகழ்த்தினார். விழாவில் நிர்வாக செயலாளர் கோயம்புத்தூர் கவிஞர் ஆ.இராஜேஸ்வரி , முதன்மை செயலாளர் கரூர் கவிஞர் சு.தமிழ்மணி , மேலாண்மை செயலாளர் திருநெல்வேலி பாப்பாகுடி அ.முருகன், ஒருங்கிணைப்பு செயலாளர் திண்டிவனம் கவிஞர் மு.அ.ரவிதா,கல்வி மேம்பாட்டுச் செயலாளர் சிவகாசி கவிஞர் சு. கனகாம்பிகை (எ) சாந்தி , கொள்கை விளக்க செயலாளர் காரைக்குடி முனைவர் அ. பாரதி ராணி, மக்கள் தொடர்பு செயலாளர் வேலூர் முனைவர் ஞா. சுஜாதா, நெறியாள்கை செயலாளர் சேலம் சு.வினோதா
முத்தமிழ் மேம்பாட்டுச் செயலாளர் பண்ணுருட்டி கவிஞர் அ. பாண்டு, தனித்தமிழ் மேம்பாட்டுச் செயலாளர் திருவள்ளூர் கவிஞர் ச.மா.மாசிலாமணி,இலக்கிய மேம்பாட்டுச் செயலாளர் கிருஷ்ணகிரி கவிஞர் தகடூர் தமிழ்கதிர், அயலக ஒருங்கிணைப்புச் செயலாளர் கத்தார் கவிஞர் சோ.கிருஷ்ணமூர்த்திஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர்கள்,பள்ளி,கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
விழாவில் தமிழ்ச் செம்மல் ஸ்ரீ குமார் அவர்களும் உளுந்தூர்பேட்டை தமிழ்ச்சங்கம் தலைவர் தமிழ்த்திரு முனைவர் அருணா தொல்காப்பியன் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்கள்.நறுமலர் மாத மின்னிதழ் வெளியிடப்பட்டது. பன்னாட்டளவில் தொடர்ந்து ஐந்து மணிநேரம் பொங்குதமிழ் என்னும் தலைப்பில் 50 கவிஞர்கள் கவிபாடினார்கள். அரியலூர் மாவடப் பொறுப்பாளர் கவிஞர் த.சித்ரா தென்காசி மாவட்டப் பொறுப்பாளர் முனைவர் மாலதி செந்தில்குமார் மற்றும் ,மாவட்டப் பொறுப்பாளர் கவிஞர் விஜயலட்சுமி ராமேஸ்வரன் கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் கவிஞர் கோவி.மகாவிஷ்ணு ஆகியோர் நெறியாளுகை செய்தனர். கல்விமேம்பாட்டுச் செயலளர் சிவகாசி கனகாம்பிகை மக்கள் தொடர்பு செயலாளர் வேலூர் கவிஞர் ஞா.சுஜாதா ஆகியோர் நிகழ்வினை ஒருங்கிணைத்தார். கவியரங்கத்தின் நிறைவாக அனைத்துலக பொங்குதமிழ் சங்கத்தின் தகவல் தொழில்நுட்பச் செயலாளர் முனைவர் க.அரிகிருஷ்ணன் நன்றி உரையினை நிகழ்த்தினார்.
செய்தியாளர்: வா. சீராளன்
No comments:
Post a Comment