கடலூர் மாவட்டம், திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் நாள் விழா மார்ச் 8 இன்று சிறப்பாக நடைபெற்றது நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் முனைவர் மு. முத்துசாமி அவர்கள் தலைமை ஏற்றார். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தொழுதூர் ஆறுமுகம் அறிவியல் கல்லூரி கல்லூரியின் முதல்வர் முனைவர் எம் ராஜலட்சுமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திட்டக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் கோமதி அவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வினை கல்லூரியில் ஆங்கில துறை உதவி பேராசிரியர் முனைவர் க. சத்யா தேவி அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
நிகழ்விற்கு உதவியாக கல்லூரியின் உதவிப்பேராசிரியர் திருமதி இரா.சிவகாமி ஆங்கிலத்துறை ஒருங்கிணைத்தார் ... நன்றி உரையாக திருமதி விஜயசாந்தி கௌரவ விரிவுரையாளர் (ஆங்கிலத்துறை ) உரையாற்றினார். நிகழ்வின் சிறப்பாக கல்லூரி மாணவிகள் கவிதை ,கட்டுரை, பேச்சுப் போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் அமைப்பான பசுமை தூண்கள் சார்பில் புத்தகங்கள் பரிசாக அளிக்கப்பட்டன.
செய்தியாளர்; வெ.பாலமுருகன்
No comments:
Post a Comment