கிள்ளையில் மாணவர்களின் விழிப்புணர்வு பேணி !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 March 2022

கிள்ளையில் மாணவர்களின் விழிப்புணர்வு பேணி !!!

கிள்ளையில் மாணவர்களின் விழிப்புணர்வு பேணி நடைபெற்றது

ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு கிள்ளை பேரூராட்சி தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார்.துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன் முன் னிலை வகித்தார். வட்டார மாற்றுத்திறன் ஒருங்கிணைப் பாளர் மணிக்கண்ணன் வரவேற்றார்.

அலுவலர் சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் கிள்ளையில் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றார்கள்.

நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ராஜசேகர், பேரூராட்சி மன்ற கவுன்சிலர் பாண்டியன் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் உள் பட பலர்கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசி ரியர் குமரவேலு நன்றி கூறினார்.

செய்தியாளர்.பாலாஜி

No comments:

Post a Comment

*/