கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே தண்ணீர் லாரி மீது டிரைலர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே டிரைலர் லாரி ஓட்டுனர் பலியானார்
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகிலுள்ள வடுகபட்டி பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் மணிமாறன்( வயது 40) என்பவர் டிஎண், 84, டபுள்யூ 3577, என்ற எண்ணுள்ள டிரைலர் லாரி ஓட்டுனரான
இவர் மார்ச் 13 ந் தேதி மானாமதுரையில் இருந்து மினி மிக்ஸர் மிஷின் லாரியை ஏற்றிக்கொண்டு, சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்க
டலூர் மாவட்டம், வேப்பூர் கூட்டுரோடு, லெமன் ஹோட்டல் அருகே, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் சென்டர் மீடியனில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த டிஎண், 45,ஏடி, 1388 என்ற எண்ணுள்ள தண்ணீர் லாரியில் டிரைலர் லாரி பலமாக மோதி விபத்து ஏற்பட்டது
இதில் தண்ணீர் லாரி மீது மோதிய வேகத்தில் டிரைலர் லாரியின் டிரைவர் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது
அதனால் டிரைலர் லாரி ஓட்டுனர் மணிமாறன் கால், ஒடிந்து, கை ஒடிந்து தொங்கிய. நிலையில் இறந்துவிட்டார் ,
அவர் அருகில் உட்கார்ந்து இருந்த மிக்சர் மிஷின் லாரி ஓட்டுனர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் அருண்பாண்டியன் (வயது 24) என்பவர் காயமின்றி உயிர் தப்பினார்
விபத்து குறித்து தகவலறிந்த வேப்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, எஸ்ஐ, சந்திரா மற்றும் வேப்பூர் போலிசார், சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர்
பின்னர் வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் லாரியின் முன்பகுதியை மிஷின் மூலம் அறுத்தெடுத்து டிரைவரின் உடலை வெளியே எடுத்தனர்
மேலும் இந்த விபத்து குறித்து வேப்பூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர்; ஜாபர்.K
No comments:
Post a Comment