கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன் அபிசுந்தர் வயது 17 தனது வீட்டில் இருந்து நேற்று காலை வெளியே சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அபிசுந்தரை காணாததால் பதற்றமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில் அபி சுந்தர் பூலாம்பாடி அருகில் உள்ள கிணற்றில் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனை அடுத்து தீயணைப்பு துறையினரின் உதவியுடன் அபிசுந்தர் சடலமாக மீட்கப்பட்டார்
இது தொடர்பாக அபி சுந்தரின் உறவினர்கள் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இந்நிலையில் அபி சுந்தரரின் உடலில் காயங்கள் உள்ளதால் ஏற்கனவே அதே கிராமத்தில் இளையராஜா என்பவருக்கும் அபி சுந்தருக்கும் முன்விரோதம் உள்ளதால் அபிசுந்தர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனக்கூறி அபிசுந்தரின் உறவினர்கள் வழக்கை கொலை வழக்காக மாற்ற வலியுறுத்தியும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது அப்போது போலீசாருக்கும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் நீதி கேட்டு சாலை மறியல் ஈடுபட்டவர்களுடன் கோட்டாட்சியர் ராம்குமார் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.உறவினர்கள் வழக்கு பதிவு செய்தால்தான் உடலை அடக்கம் செய்யப்படும் என கோரிக்கை வைத்தனர். கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாகவும், இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவும் ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதியளித்தார் .டிஎஸ்பி சிவா வட்டசியர் மோகன் ,இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் K.ஜாபர்
No comments:
Post a Comment