விருத்தாசலம் அருகே பூட்டை உடைத்து திருட்டு !! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 March 2022

விருத்தாசலம் அருகே பூட்டை உடைத்து திருட்டு !!


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டையை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி  தனலட்சுமி. இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2 மகள்ளுக்கு திருமணம் நடத்துவிட்டது. 3-வது மகள் ஜெயலட்சுமி விவசாய படிப்பில் பி.எச்.டி முடித்து காரைக்காலில் உள்ள ஒரு கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.


இந்த நிலையில் சின்னதுரை இறந்து விட்டதால், தனலட்சுமி முந்திரி விவசாயம் செய்துகொண்டு தனது மகன் விக்னேசுடன் வசித்து வருகிறார். தனலட்சுமி இன்று காலை  தனது மகன் விக்னேசுடன் விவசாய நிலத்துக்கு சென்றுவிட்டு பணியை முடித்து மதியம் 1 மணியளவில் வீட்டுக்கு  திரும்பிவந்து உள்ளார்.அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. 

மேலும் பீரோவில் வைத்திருந்த 110 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 2 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டுக்குள் புகுந்து தனலட்சுமி தனது மகள் ஜெயலட்சுமியின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.  அவற்றின் மொத்த மதிப்பு ரூ.41 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/