2021-2022 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கடற்கரை கால்பந்து, கடற்கரை கபடி, கடற்கரை கையுந்துபந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் 15-03-2022 அன்று காலை 8.00 மணிமுதல், கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரை பகுதியில் இருக்கும் சிறுவர் பூங்காவிற்கு எதிரில் உள்ள கலையரங்க மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.
மேற்படி போட்டிகள் ஆடவர் மற்றும் மகளிருக்கு தனித்தனியாக நடைபெறும். கடலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் அணியாக மட்டுமே பங்கேற்க வேண்டும்.
போட்டிகளில் பங்குகொள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டுவர வேண்டும். கடற்கரை கையுந்து பந்து போட்டிக்கு 2 வீரர்கள் மற்றும் 2 வீராங்கனைகளுக்கு, கடற்கரை கால்பந்து போட்டிக்கு 5 வீரர்கள் மற்றும் 5 வீராங்கனைகளும், கடற்கரை கபடி போட்டிக்கு 6 வீரர்கள் மற்றும் 6வீராங்கனைகளும் அமைதிக்கபடுவர்.
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பெறும் அணிவீரர்கள் / வீராங்கனைகளுக்கு தலா முதல்பரிசு ரூ.500/-ம், இரண்டாம் பரிசு ரூ.350/-ம், மூன்றாம் பரிசாக ரூ.200/-க்கான காசோலையாகவும் பற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர்.
கலந்து கொள்ள விரும்பும் அணிகள் இதற்கான நுழைவு விண்ணப்பத்தினை, கலந்துகொள்பவர்களின் பெயர், முகவரி மற்றும் கைபேசி எண் ஆகிய விபரங்களுடன் (15-03-2022)அன்று மாலை 5.00 மணிக்குள் கடலூர் கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவருக்கு கிடைக்கும்படி அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
எனவே அரசின் நிலையான கொரானா நோய் தடுப்பு செயல்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, மேற்கண்ட போட்டியில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி,கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் விளையாட்டு கழக அணி வீரர்கள் வீராங்கனைகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கி.பாலசுப்ரமணியம் அவர்களால் கேட்டுக்கொண்டார்
No comments:
Post a Comment