சிறந்த விவசாயிகளுக்கான பரிசு பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்லைவர் திரு.கி.பாலசுப்ரமணியம், இஆப,அவர்கள் தகவல்
தமிழக அரசு 2021-22 வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி கீழ்க்காணும் அம்சங்களில் சிறந்த விவசாயிகளைத் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. வேளாண்மைத் துறை;
- சிறந்த உள்ளூர் புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்பு சிறந்த உள்ளூர் புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் கண்டுபிடித்த விவசாயி ஒருவருக்கு மாநில அளவில் ரூ.1 இலட்சம் தமிழக வேளாண் துறையால் பரிசாக வழங்கப்பட உள்ளது
- சிறந்த உள்ளூர் புதிய வேளாண் கருவி கண்டுபிடிப்ப சிறந்த உள்ளூர் புதிய வேளாண் கருவி கண்டுபிடித்த விவசாயி ஒருவருக்கு மாநில அளவில் ரூ.1 இலட்சம் தமிழக வேளாண் துறையால் பரிசாக வழங்கப்பட உள்ளது.
மேற்காணும் இரண்டு அம்சங்களுக்கான விண்ணப்பங்களை வேளாண் துறையை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம். முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 14.03.2022- அன்று மாலை 3.00 மணிக்குள் வேளாண்மை இணை இயக்குநர், கடலூர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
2.தோட்டக்கலைத் துறை;
- சிறந்த அங்கக விவசாயிகளுக்கு மாநில அளவில ரூ.இரண்டு இலட்சம் பரிசு சிறந்த அங்கக விவசாயிகளுக்கு முதல் பரிசு ரூ.1 இலட்சம், இரண்டாம் பரிசு ரூ.60,000/-, மூன்றாம் பரிசு ரூ.40,000/- தமிழக தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்பட உள்ளன.
- இதற்கான விண்ணப்பங்களை தோட்டக்கலைத் துறையில் பெற்று, முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 14.03.2022- அன்று3.00 மணிக்குள் தோட்டக்கலை துணை இயக்குநர். கடலூர்அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
3.வேளாண் வணிகத் துறை;
- மாநில அளவில் சிறந்த வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளருக்கு ரூ.2 இலட்சம், மாநில அளவில் தமிழக வேளாண் வணிகத் துறையால் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை 14.03.2022- அன்று மாலை 3.00 மணிக்குள் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), கடலூர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அறிவித்தார்.
No comments:
Post a Comment