கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர் ,இந்த பள்ளியின் மேற்கூரையானது பழுதடைந்த நிலையில் உள்ளது. மேற்கூரையை சீரமைக்க கோரியும் கழிவறைகளை சீரமைக்க கோரி பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்றும் நேற்று பெய்த பரவலாக மழையின் காரணமாக மேற்கூரை பழுதடைந்து உள்ளதால் அதன் வழியாக மழை நீரானது வகுப்பறையில் தரைகளில் தேங்கி நின்றது,
மேலும் கொரோனா பரவி வருகின்றன காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவ , மாணவிகளின் நலன்களை கருத்திற்கொண்டு விடுமுறையானது அறிவிக்கப்பட்டது,
கொரோனா பரவல் குறைந்த நிலையில் சில நாட்களாக பள்ளிகள் திறந்து மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படுகிறது, இந்த நிலையில் வகுப்பறை மழையினால் ஈரமானது மாணவர்கள் அமர்ந்து பாடம் படிக்க இயலவில்லை பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளியின் மேற்கூரையை சீரமைக்க கோரி ஆசிரியர் மற்றும் பெற்றோர் , ஊர் பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.
செய்தியாளர்; K.ஐாபர்
No comments:
Post a Comment