விருத்தாசலம் ஒன்றியம் புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் தந்தை ரோவர் வேளாண் இறுதியாண்டு மாணவர்களின் ஊரக வேளாண் பயிற்சி அனுபவத்தின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நிகழ்த்தினர்.
இம்முகாமிற்கு தலைமையாசிரியர் புஷ்பவள்ளி தலைமை ஏற்றார். அறிவியல் ஆசிரியர் குனசேகரன் சிறப்புரை ஆற்றினார். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீர் வளம் காப்போம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும் மண் வளம் காப்போம் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் நடத்தினர். நேனோ தொழில்நுட்பம், நவீன விவசாயம் மற்றும் வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் நெகிழி இல்லா சமூகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் பேரணியும் இறுதியாக பள்ளி வளாகத்தில் அசோக புங்கம் வேம்பு போன்ற மரக்கன்று நடும் நிகழ்வும் நடைபெற்றது.
No comments:
Post a Comment