கடலூரில் இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் குத்தி வாலிபர் பலி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 12 March 2022

கடலூரில் இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் குத்தி வாலிபர் பலி

 

கடலூர் மாவட்டம், சான்றோர்பாளையத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் வெங்கடேசன்(வயது 28). இவர் நேற்று குடித்துவிட்டு போதையில் சான்றோர்பாளையம் பள்ளிக்கூடத்தெருவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவரது இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் உடைந்து  குத்தியதில் பலத்த காயமடைந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/